11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

ரெலோ இயக்க அழிப்பு தமிழின படுகொலை.

நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது.அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம்.

06ம் திகதி மே மாதம் 1986 ம் ஆண்டு கோண்டாவில்  புகையிலைக் கன்றுகளுக்குகிடையே சிறி சபாரத்தினம் இருந்தார். சிறி சபாரத்தினத்தின் வசமிருந்த பிஸ்டலைப் பறித்துக்கொண்டு பொபி எப்படியோ தப்பி ஓடிவிட்டார். புகையிலைக் கன்றுகளுக்குகிடையில்  கிட்டுவின் தலைமையில் சென்ற புலிகள் சுற்றி வளைத்தனர்.

 கிட்டுவை நோக்கி சிறீசபாரெத்தினம். “நாங்கள் பிரச்சனையைப் பேசித் தீர்கக்லாம்” என்று சொன்னார்.  கிட்டு பதிலேதும் சொல்லவில்லை. சுடத்தொடங்கினார்.  சிறீசபாரெத்தினமும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.  

 சிறி சபாரத்தினம் கொலை செய்யப்பட்டாா். உரும்பிராய் கோவிலடிக்கு சிறி சபாரத்தினத்தின் சடலம் கொண்டு வரப்பட்டது தூக்கிக் கொண்டு புலிகள் சென்றுவிட்டனர்   சபாரத்தினம் உடன் சேர்த்து ஆயிரக்கணக்கான  தமிழிழ விடுதலை இயக்கமான (டெலொ) வின் படையனிகள் கொலை செய்யப்பட்டது தமிழின படுகொலை.

அதனையடுத்து ஒலிபெருக்கி பூட்டிய கார்களில் புலிகள் அறிவித்த செய்தி இது:  “இந்திய கைக்கூலிகளான ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் இன்று நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டார். 

ரேலோ உறுப்பினர்கள் எம்மிடம் வந்து சரணடைந்தால் மன்னிப்பு வழங்கப்படும்.”  சிறீசபாரெத்தினம் கொல்லப்பட்டதை ஏனைய இயக்கங்கள் யாவும் கண்டித்தன.  யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் சவப்பெட்டி ஊர்வலம் ஒன்றை நடத்தியது. பல நூற்றுக்கணக்காக மக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி சிறீசபாரெத்தினம் பலியான செய்தி கேட்டு அதிர்ந்து போனார்.  முரசொலி பத்திரிகையில் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் “எனது நெஞ்சில் இருந்து இரத்தம் வடிகிறது” என்று தனது வேதனையை வடித்திருந்தார். புலிகளையும் கண்டித்திருந்தார்.

தமிழிழ விடுதலை இயக்கமான (டெலொ) வின் இராணுவ தளபதியான தாசை பொபிக்காக சூழ்ச்சி செய்து கொலை செய்த தமிழிழ விடுதலை இயக்கமான (டெலொ) வின் தலைவர் சிறி சபாரத்தினம் அவரின் வினை காரணமாக கொல்பட்டாா். அவரின் வலது கரமான பொபி சிறி சபாரத்தினத்தின் ஆயுதத்தையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டான் சூழ்சிகள் சூழ்சிகளை கொள்ளும்.அதேபோன்று விடுதலை புலிகளும் அதேவகையில் மாண்டு கொண்டாா்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.