11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

திராவிட இனத்தின் தொலைக்காட்சிகளின் தமிழின அழிப்பு.

 தமிழுடன் ஆங்கிலத்தை நன்றாக கலந்து பேசவைத்து தமிழின் சிறப்பை சிதைத்து தமிழ் அழிப்பை திறம்பட நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழக  திராவிட தொலைக்காட்சிகள்  தமிழக இந்து ஆலயங்களில் தமிழ் பூசைகள் செய்தல் வேண்டும் என்று பிரச்சாரங்களை  செய்து வருகின்றாா்கள்.

 1).அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது? 2).அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது? 3).மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது? 4).மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது? 5).பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு செய்வது? 6).எந்த தவறை எப்படி மறைப்பது? 7).அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது? 8).மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது? 9).கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது? 10-எப்படி பழிக்குபழி வாங்கலாம்? 11).ஆபாசமாக பேசுவது எப்படி? 12), அடுத்தவன் மணைவியை எப்படி தள்ளிக்கொண்டு போவது ? 13-அடுத்தவன் மணைவியுடன் கள்ள காதல் ,விபச்சாரம்,எப்படி செய்வது? 14- ஏமாற்றுதல்,அபகரிப்புசெய்தல், ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம், அநியாயம்,அக்கிரமம்,பொய், திருட்டுஎப்படி செய்வது ? 15-90% வன்முறை காட்சிகள்...* 16-ஆபாசம் பற்றி சொல்லவே வேண்டாம் (உள்ளாடை தான் மேலாடையாக மாறிவிட்டது.) 17-'வெட்றா அவள; குத்துடா அவள' பாட்டுக்கு 'விருப்பம்' போடுவது* 18-ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காமக்காதல். 19-தனக்கு வந்தா இரத்தம் மற்றவா்களுக்கு வந்தா ‘தக்காளி சட்னி’ என்ற மனப்பாங்கு கொண்டவா்களை உருவாக்குகின்றது. 20-புலியை முறத்தால் அடித்த காலம் சென்று, வீரம் மறைந்து ‘கோழையாக’ மாறிக் கொண்டிருக்கும் தமிழ்சமூகம் உருவாகி கொண்டிருப்பவா்கள் திருட்டு திராவிட தொலைக்காட்சிகள்.

அத்துடன் மணிநேரம் ஒர அடிமை கூட்டங்களை உருவாக்கி தமிழினத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படுகின்ற 98% பிரச்சனைகளுக்கு காரணம் இந்த சீரியல்கள். பொழுது போக்கு என்ற பெயரில் "எதை"வேண்டுமானாலும் பார்ப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பதுதான் உண்மை. நல்ல எண்ணங்களும்  நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடையாளம். தீமைகளையும், பாவங்களையும் ரசிப்புக்குரியவையாக நாம் பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும். சீரியல் என்பது தீமைகளின் " உருவாக்கம் " எனவே சீரியல் பார்ப்பதை விட்டும் நம்மையும் நமது பாதுகாத்துக் கொள்வோம்.  

தமிழ் கலாச்சார பண்பாட்டு முறையில் காலை மாலை நேரங்களில் மங்ககரம் நிறைந்த விளக்குகள் ஏற்றுகின்ற நேரத்தில் தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புகள் செய்கின்ற திராவிட இனத்தின் தொலைக்காட்சி சீரியல்களில் அழுகை காட்சிகளும், ஐயயோ, நாசமா போய்விடுங்கள் அவசகுணம் நிறைந்த  வசனங்களே இடம்பெறும்.

 திராவிட இனத்தின் தொலைக்காட்சிகளை தடைசெய்வோம். உறங்காதகுடும்ப கண்மணிகள் எந்தப் பெரிய உலகப் பிரச்சனையாகட்டும். நள்ளிரவாகட்டும். நெருக்கடியான ஒரு நாளாகட்டும், வேலைக் களைப்பாகட்டும்.வீடுகலில் சமையல் இல்லை தங்களுக்கு பிடித்த உணவை உணவகங்களிள் பெற்றுக் கொண்டு திராவிட தொலைக்காட்சியில் பாா்ப்பதை தடைசெய்வோம்.

தமிழர்களை கொலை செய்வது மட்டும்  தமிழின அழிப்பு அல்ல . தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்படுகளை சிதைத்து அதன் மூலம் தமிழ் சமுதாய சீா்கேடுகளை உருவாக்கி   தமிழினத்தை   அழிப்பது தமிழின அழிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.