11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 14 ஆகஸ்ட், 2021

தமிழர்களுக்காக குரல் கொடுத்த ஆதீனத்திற்கு கண்ணீா் அஞ்சலி.

இலங்கை நுவரெலியாவில்  தொண்டை மண்டல குடும்பத்தில் பிறந்தவர் 12 வயதில் தமிழகம் வந்து பல ஆன்மீகப்பணிகளை மேற்க்கொண்டவர்.   10க்கும் மேற்பட்ட பிற மொழிகளை எழுத படிக்க  பேசத்தெரிந்தவர்   மதுரை ஆதினத்தின் பிரதம குரு. அனைத்து சமூக மக்களிடமும் பேரன்பு காட்டியவர்.   சைவ  சமயத்திற்கும்  தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர்  நம்மை விட்டு மறைந்தார் .

தமிழர்களுக்காக குரல் கொடுத்த மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத பரமாச்சாரிய குருமகா சந்நிதானம் அவர்கள் தனது 77வது வயதில் நம்மை விட்டு மறைந்தார் .

1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் மதுரையில் தோற்றுவிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த மதுரை ஆதீனத்தின் இளையவராக 27.5.1975 இல் பொறுப்பு ஏற்ற அருணகிரிநாதர் 14.03.1980 அன்று மதுரை ஆதீனமாகப் பொறுப்பு ஏற்றார்.

அருணகிரிநாதர்  அவர்கள், சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் தமிழகத்தில் மட்டும் அல்லாது, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, ஹாங்காங், ரஷ்யா ஆகிய அயல் நாடுகளிலும் சைவ சித்தாந்தத்தின் சிறப்புகளையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்.

கிறிஸ்தவ இன வெறிபிடித்த இலங்கையின்  கிறிஸ்தவ   சிங்கள  அரசு மேற்கொண்ட தமிழின படுகொலைகளுக்கும் எதிராக முதல் முதலாக   தமிழினத்தின்   முதன்மையானவரான மதுரை ஆதினம் அவர்கள் பேசி வந்தார்.  அத்துடன் அவருடன் இனைந்து பல இந்து அமைப்புகளும் ஆதரவு கொடுத்து பேசிவந்தாா்கள். இதனை யாரும் மறுக்க முடியாது.

1981 ஆம் ஆண்டில் தென்காசி மீனாட்சிபுரத்தில் மத மாற்றம் காரணமாக மதக் கலவரம் வெடித்துக் கிளம்பும் சூழ்நிலையை அறிந்து, அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அனைத்து மக்களையும் சந்தித்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர் அருணகிரிநாதர். மீனாட்சிபுரத்தில் உள்ள ஆதி திராவிட மக்களோடு அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். அந்த விருந்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பெஜாவர் மடத்தின் பீடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி  போன்றவர்களும் கலந்துகொண்டது வரலாற்றுச் சிறப்புக்கு உரிய நிகழ்வு ஆகும்.

1981, 1982 ஆம் ஆண்டுகளில், குமரி மாவட்டம் - மண்டைக்காடு பகுதியில் இந்து - கிறிஸ்தவர்களிடையே மதக் கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்ட கலவரமான அந்தக் காலத்தில் நான்கு மாத காலம் அங்கேயே தங்கியிருந்து, அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சமாதானம் செய்து வைத்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை ஆதீனத்தின் சார்பில் உணவும், உடையும் மருந்துப் பொருள்களும் வழங்கிய மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்தான் மதுரை ஆதீனம்.

1983 ஆம் ஆண்டில், இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வெட்டிக்  கொல்லப்பட்டபோதும், அங்குள்ள சிவாலயங்கள் இடித்து நொறுக்கப்பட்டபோதும் அதனைக் கண்டித்து மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்தார்.

1986 ஆம் ஆண்டு மே மாதம் மதுரையில் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு மகாநாட்டில் கூட  மதுரை ஆதினம் அவர்களுடன் இனைந்து பல இந்து அமைப்புகளும்  ஆதரவு கொடுத்தாா்கள். எந்தவொரு முன்னால் ஈழபோராட்ட அமைப்புகளும் இதனை மறுக்க முடியாது.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் நடத்திய எண்ணற்ற மாநாடுகளில் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக  தன்னுடைய கம்பீரக் குரலால் உரையாற்றியவர்.  ராமேசுவரத்தில் நடந்த கச்சத்தீவை மீட்கும் போராட்டத்தில் 1985-ல் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 ஈழ விடுதலை ஆதரவு பொதுக்கூட்டம் திருச்சி மாநகரத்தில் நடைபெற்றபோது மேடையில் உரையாற்றிய மறைந்த ஆதீனம் அவர்கள் தன்னுடைய உதவியாளர் பெயர் முருகன் என்பதை முருகா துப்பாக்கியை கொண்டு வா என்று சொல்லி மேடையில் துப்பாக்கியை ஏந்தி ஆவேச உரையாற்றினார் இது தீபா தாரணை காட்டுகிற கை மட்டுமல்ல துப்பாக்கி இயங்குகிற நிலைமையும் உடைய கை என்று பேசிய காரணத்தினால் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் இவர் மீது வன்முறையைத் தூண்டுகிறார் என்று வழக்கினை புனைந்தார் அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது விசாரணை  மன்றத்தில் மதுரை ஆதினம் அவர்கள் நேர் நின்ற நேரத்தில் அவர் சார்பில் ஆஜராகி வாதிட ஆயிரம் வழக்கறிஞர்கள் அந்த நீதிமன்றத்திலே உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்தபோது நீதிபதி அந்த வழக்கை அன்றைக்கு  ஒத்தி வைத்தவர் தான் இன்று வரையில் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  மதுரை தமுக்கம் மைதானத்தில்  தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில்  அவர் ஆற்றிய உரை என்பது  மிகக் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. பிறகு அரசியல் சூழ்ச்சியால்  அரசியல் சதுரங்கத்தில்  அவர் மாட்டிக்கொண்டு  பல்வேறு சர்ச்சைகளுக்கு  ஆளானவர்தான்  மதுரை ஆதீனம் தனக்குப் பிறகு இளைய பட்டமாக  யாரை நியமிப்பது என்பதில் பல்வேறு தவறுகளை  கடந்த காலங்களில் செய்த வரலாறு  உண்டு  ஆனால் அவர் மிகுந்த தமிழ்ப் புலமையோடு  தமிழர்களின் வாழ்வியலுக்கு உறுதுணையாக செயல்பட்டவர் என்பதில்  எவ்வித கருத்து மாறுபாடும் இல்லை .

திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாழ்ந்து மறைந்த உமையவள் ஆற்காடு கிராமத்தைச் சார்ந்த கலைச்சோழன்  அவர்கள் இயக்கத்தில்  வேங்கையே வெளியே வா  என்கிற  நாடகத்தை நாங்கள் முன்னின்று நடத்திய போது தஞ்சை பெத்தண்ணன் கலையரங்கத்தில் அந்த  நாடகத்துக்கு  தலைமை ஏற்று அவர்  சிறப்பித்ததோடு அல்லாமல் அந்த நாடகத்தின் இறுதிக் காட்சியில் துப்பாக்கிச் சத்தத்தில் வெடி வெடிப்பதை போல ஒரு காட்சி அமையும் அந்த துப்பாக்கிச் சத்தத்தில் இந்திய வரைபடம் சிதறுண்டு போகிற நேரத்தில் அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மதுரை ஆதினம் அவர்கள் தன்னுடைய கம்பீரக் குரலால் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமி்ட நாடகத்தை பார்க்க வந்த அத்தனை பெருமக்களும் தமிழ்நாடு தமிழருக்கே என  முழக்கம் இட்டார்கள்.

தமிழர்களின் அரசியலின் ஊடாக கிறிஸ்தவம் தன்னை பாதுகாத்துக் கொண்டு நிலை நிறுத்தி மேலும் விாிபுபடுத்தி கிறிஸ்தவ மயப்படுத்தலுக்காக கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவையும் பெற்றால் மேற்குலகின் ஆதரவை பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று கூறி சென்னை பேராயராக 74 வயது நிரம்பிய அதிவணக்கத்திற்குரிய அந்தனி அருளப்பு ராயப்பு அவர்களும் ஏனைய இலங்கை இந்திய பாதிரிகளும் கூட்டாக இனைந்து கிறிஸ்தவ மிசனறிகள் சதி செய்து தமிழீழ விடுதலை போராட்டத்தை கிறிஸ்தவ மயப்படுத்தி  ஈழபோராட்ட வாதிகளுக்கும் இந்திய இந்து அமைப்புகளுக்கும் எதிா்காலத்தில் எந்தவொரு தொடர்புகளும் ஏற்படாவண்ணமாக முற்றிலும் துண்டிக்கும் முகமாக  பல வழிகளிலும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த மதுரை ஆதீனத்தை தமிழர் அரசியலுன் ஊடாக நீக்கி மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தாா்கள்.

மதுரை ஆதினம் தமிழகத்தில் மிகத்தொன்மை வாய்ந்த மடாலயங்களில் ஒன்று 292 ஆவது ஆதீனமாக கடந்த  நாற்பத்தி ஒரு ஆண்டுகள் பணியாற்றி எண்ணற்றஆலயங்களில் புனரமைப்பு பணியினை செய்திருக்கிறார் அவருடைய மறைவு என்பது இறைநம்பிக்கையின் உள்ளவர்களுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் தமிழ் தேசியமே உன்னத தேசியம் என்று பன்னெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிற பெருமக்களுக்கு பெருத்த இழப்பாகும் . அளவற்ற அவரது அரும்பணிக்கு மறுமலர்ச்சி அருளகம் சிவபுரம் சார்பில் வீர வணக்கத்தையும், புகழ் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.