11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

மடு-கோயில்மோட்டை பகுதியில் உள்ள 50 ஏக்கர் விவசாய காணியினை கத்தோலிக்க மதம் பெற்றுக் கொண்டது முறை பற்றி இலங்கை அரசு உடனடியாக விசாரனை குழுவை அமைத்து விசாரனை செய்தல் வேண்டும்.

கத்தோலிக்க மதத்தின் ஒப்புதல் வாக்கு மூலம்.

மடு-கோயில்மோட்டை பகுதியில் உள்ள 50 ஏக்கர் விவசாய காணியில் 5 ஏக்கர் காணியில் மடு தேவாலயம் சார்பாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, ஏனைய காணியில் 27 விவசாயிகள் குத்தகை அடிப்படையில் இவ்வளவு காலமும் மடு தேவாலயத்திற்கு குத்தகையை செலுத்தியே விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட காணி பொறுப்பாளர் அருட்பணி இ. அன்ரனி சோசை அடிகளார் தெரிவித்தார்.

மடு-கோயில் மோட்டை பகுதியில் உள்ள விவசாய காணி தொடர்பாக நீண்ட காலம் இடம் பெற்ற கருத்து முரண்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட காணி பொறுப்பாளர் அருட்பணி இ. அன்ரனி சோசை அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மடு-கோயில் மோட்டை விவசாயக் காணி தொடர்பாக அண்மையில் காணி ஆணையாளர் தலைமையில் மடு பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் அடிப்படையில் காணி ஆணையாளர் நாயகம் அனைவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டதன் பிற்பாடு, அவர் வழங்கிய தீர்மானத்தின் படி இவ்வருடம் கடந்த வருடத்தை போன்று மடு பரிபாலகரினால் அவ்விடத்தில் 5 ஏக்கர் காணியில் விவசாயம் செய்யப்படவும், ஏனைய காணிகளில் ஏனைய விவசாயிகள் மேற்கொண்டு வந்தது போன்று 2 ஏக்கர் வீதம் விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுக்க அதிகாரிகளுக்கு பணித்தார்.

இந்த நிலையில் மடு பரிபாலகர் விவசாய உத்தியோகத்தரினாலேயே மடு தேவாலயத்திற்கு இந்த கால போகத்திற்கு மேற்கொள்ள வேண்டிய விவசாய காணியை காட்டியதன் பிற்பாடு மடு பரிபாலகர் தனது வேலையாட்களை அனுப்பி குறித்த விவசாய காணியில் 2 தடவைகள் உழுதுள்ளார்.

பின்னர் கடந்த ஒரு வாரத்தில் நாங்கள் குறித்த காணிக்குச் சென்று உழுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது ஏனைய விவசாயிகள்  காணிக்குள் செல்லக்கூடாது. அது உங்கள் காணி இல்லை என அவர்கள் தற்போது கூறி வருகின்றனர். ஆனால் காணி ஆணையாளர் நாயகத்தால்ல வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக நாங்கள் குறித்த காணியில் இந்த கால போகத்திலே விவசாயம் செய்ய வேண்டும்.

நாங்கள் 5 ஏக்கர் காணியில் மேற்கொண்டு வரும் விவசாயத்தில் கிடைக்கும் பணத்தில் மடு தேவாலயத்தின் அபிவிருத்தி பணிக்காகவும், பிறர் நல சேவைக்காகவும் சிறுவர் காப்பகங்களில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் கால காலமாக நிதியை பயன்படுத்தி வருகிறோம்.

ஏற்கனவே காணி ஆணையாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக தற்போது குறித்த விவசாய காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் 27 பேரும் தங்களது கால போக பயிர்ச் செய்கையின் பிற்பாடு, அவர்கள் குத்தகையாக மடு தேவாலயத்திற்கு குத்தகையை செலுத்த வேண்டும் என காணி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

குத்தகை மூலம் கிடைக்கின்ற அனைத்து நிதியையும் பிறர் நல சேவைக்காகவும், சிறுவர் இல்லங்களில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்யவும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் கூட்டத்தில் மடு தேவாலயத்திற்கு பயிர்ச் செய்கைக்கு காணி 50 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை  தொடர்பாகவும், குறித்த காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் 27 விவசாயிகள் உர சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இவ்வளவு காலமும் காணி உரிமையாளராக மடு தேவாலயம் என்று குறிப்பிட்டு ஆவணம் தயாரித்து உரச் சலுகையையும் பெற்று வந்துள்ளனர்.

மேலும் 27 விவசாயிகளும் தங்களது கையினால் எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் மடு தேவாலயத்திற்கு சொந்தமான கோயில் மோட்டையில் உள்ள வயல் காணியை விவசாய செய்கைக்கு குத்தகைக்கு தந்து உதவும் படியும், குத்தகையாக ஒரு காணிக்கு ஒரு மூட்டை நெல் கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்குவதாகவும், தங்களின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடப்பேன் என கூறிக் கொள்கிறோம் என விவசாயிகள் தங்களது கையொப்பத்துடன் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கடிதங்கள் மற்றும் உரிய ஆவணங்கள் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் , மடுத்திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட காணி பொறுப்பாளர் அருட்பணி இ. அன்ரனி சோசை அடிகளார் மடுத்திருத்தல முன்னைநாள் பரிபாலகர் பி.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கத்தோலிக்க மதத்தின் ஒப்புதல் வாக்கு மூலத்தினை சாட்சியாகவும்  ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு மடு-கோயில்மோட்டை பகுதியில் உள்ள 50 ஏக்கர் விவசாய காணியினை எவ்வாறு கத்தோலிக்க மதம் பெற்றுக் கொண்டாா்கள் என்பதனை இலங்கை அரசு உடனடியாக விசாசரனை செய்தல்.

 50 ஏக்கர் விவசாய காணியினை அடிபடையாக கொண்டே கிறிஸ்தவநாட்டை உருவாக்கிகொண்டு இருக்கின்றாா்கள்  கிறிஸ்தவ நாட்டை மிசனிறிகள் உருவாக்கினால் இலங்கையின் ஐக்கியத்திற்கு பாதிப்பாக அமையும் அத்துடன் இந்து பெளத்த சிங்கள மக்களுக்கும் சைவக் குடிதமிழா்களின் அழிவிற்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.