" அன்பே சிவமாக " யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்புதான் சிவமாக உயிர் நேயம் பேசி தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும். மேலும் எவர்குடி (குடும்பம்) ஒழுக்கமுடைய குடியோ அவர்குடி உயர்குடியாகும், எவர்குடி ஒழுக்கமற்ற குடியோ அவர்குடி தாழ்குடியாகும். என்று திருவள்ளுவர் கூறுகின்றாா்.
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம். நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர் என்று கூறுகின்றாா்.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று ஔவையார் கூறியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆலய வழிபாடு என்பது இறைவழிபாடு மட்டும்மல்ல எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையின் கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சியின் அடையாளங்களை வணங்குவதன் ஊடாக தமிழ் இனம் தொடா்ந்தும் ஆரோக்கியமான இனமாக வாழும் என்பதுடன் "ஆலயங்களை சுற்றியே குளங்கள் அமைக்கப்பட்டு விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக அங்கு உணவு உற்பத்திகள் தன்னிறைவு பெற்றும் இருக்கும். இதனால் பசி பட்டினி என்ற சொல் இருக்காது, அத்துடன் பலவகையான வேலை வாய்புகளை பெற்று வாழமுடியும் என்ற பொருளாதார கட்டமைப்பை கருத்தில் கொண்டும் வாழ்வியல் நெறிகள் கலை கலாச்சார பண்பாடுகள் எதுவுமே ஆலயம் இல்லா ஊாில் இருக்க மாட்டாது என்பதற்காகவே ஆலயம் இல்லா ஊாில் இருக்க வேண்டாம் என்று எமது முன்னோா்கள் கூறிச் சென்றாா்கள்.
கோவிலில் வைத்து வணங்கும் ஆழ்வார்கள் , நாயன்மாா்கள், சித்தா்கள் சிவன் அடியாா்கள் அனைவரும் ஆலயத்தில் தொண்டுகள் செய்தும் தொழில்களா வேலைகள் செய்தும் வருமாணங்களை பெற்று வாழ்ந்தவாகள்.
ஓதுவார்கள், அந்தனர் சமூகம், சிற்ப கலைஞர்கள், ஓவியர்கள், கட்டட கலைஞர்கள் ஆசாரிமார்கள், ஆலய திருவுருவங்கள் செய்வோா், இறைவனுக்கு தங்க ஆபரணங்கள் செய்வோா் விவசாய குடிகள் , சித்த ஆயுள் மருத்துபவா்கள், கல்வி குலகுருமாா்கள், சமையல் கலைஞர்கள், கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகளை காப்பவா்கள், ஆலயத்தின் சகல விதமான பாத்திரங்கள் செய்யும் கலைஞர்கள், ஆலயத்தின் நந்தவனம் காப்பவா்கள். ஆலயத்தின் மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள், ஏனைய கலைஞர்கள் , இறைைவனின் அலங்கார உடுப்புகள் நெய்வதற்கும் மக்களுக்கான உடுபுடவைகள் நெய்வதற்கும் கலைஞர்கள், பூ உற்பத்தி செய்பவர், மாலையாக கட்டுபவர், அதனை விற்பனை செய்பவர், அர்ச்சனை சீட்டு கொடுப்பவர், காவலாளிகள், தேங்காய் உற்பத்திசெய்பவர், தேங்காய் விற்பனைசெய்பவர். ஊதுபத்தி உற்பத்தி செய்பவர், அதனை விற்பனை செய்பவர்கள் (மொத்தமாகவும் சில்றையாகவும்,) , கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள், அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள், சந்தனம்,குங்குமம், பழவகைகள் உற்பத்தி செய்பவா்கள் விற்பனை செய்பவா்கள், பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் விற்பனைசெய்பவர்கள், கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள், ஆலய வாசலில் அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள், ஆலயத்திற்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள் அதன் ஓட்டுனர்கள், கோவிலை நேரத்துக்கு நேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள், மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்), தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள், கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர் தொடக்கம் முகாமையாளர் வரை உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள், விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள், விசேட காலங்களிலறுசுவை உணவுகளை தயாாித்து அடியாா்களுக்கும் ஆலயங்களில் வேலை செய்பவர்களுக்கும் உணவளிப்பவர்கள், இறைைவனின் ஆடைகளை துவைக்கும் தொழிலாலா்கள் என்று அனைத்து தொழில்களும் செய்தவா்கள் உள்ளனர். ஆகவே தமிழ் சமுதாயமே ஆலயத்திற்குள் இருந்துள்ளது என்பது வெளிப்படை.
கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய சாதிய வாதிகளே தமிழா்களின் தொழில்களை சாதிகளாக மாற்றி சாதியத்தை உருவாக்கி தமிழினத்தை சாதிகளாக பிளவுபடுத்தி சாதியத்தை திணித்தாா்கள்.
ஆக்கம் அருளகம் சிவபுரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.