11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 16 செப்டம்பர், 2021

தமிழ்தேசியத்தின் குரல் என்றால் என்ன?

 கிறிஸ்தவ, கம்யூனீச, சோசலீ ,லெனினிய ,மாவோயிச போன்ற அன்னிய அடிமைத்தன வாதிகள் தமிழ்தேசியத்தின் குரல்  என்பதற்கு விளக்கம் கேட்டு இருந்தாா்கள் அவா்களுக்கான  விளக்கத்திற்காக இந்த பதிவினை பதிவிடுகின்றேன் நன்றி. 


உலகின் முதலான ஆதி ஒலி ஒளியான சிவனின் உருவம், அருவம். அருவருவம் என்கின்ற மூவகைத் திருமேனியில் இருந்து எழுந்த ஒலியும் ஒளி அசைவுகளில் இருந்து   வெளிப்படுகின்ற  சுடரும் தமிழும் இனைந்ததே  தமிழ்சுடராகும் அதுவே தமிழ்தேசியத்தின் குரல். 

ஏழு சுரங்களாக " சங்கீதத்தில் சொல்லபடுகின்ற அ, உ என்ற உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து சோ்ந்த உயிா் மெய் எழுத்துக்களில் இருந்து உருவான அ காரம் உ காரம் ம காரம் ஆகியவற்றின் ஒலியும் ஒளி அசைவுகளில் இருந்து   வெளிப்படுகின்ற சுடரும் இனைந்ததே ஓம்  ஆகும். ஓம் என்ற பிரவத்தின் ஒலி ஓளி வடிவங்களின் வெளிப்பாடே  தமிழ்சுடராகும் அதுவே தமிழ்தேசியத்தின் குரல்.  

 மணித உடலின் சக்கரங்களின் அசைவுகளில் இருந்து எழுகின்ற தமிழின் ஐம்பத்தொன்று அச்சரங்களின்  ஒலி ஒளி வடிவமே  தமிழ்சுடராகும் அதுவே தமிழ்தேசியத்தின் குரல். 

அ என்பது இறைவனையும், உ என்பது உலக உயிர்களையும், ம் என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் அதன் இயக்க வெளிப்பாடுகளான ஒலியும் ஒளி அசைவுகளின்  வெளிப்பாடுகளே  தமிழ்சுடராகும் அதுவே தமிழ்தேசியத்தின் குரல். 

மணிதனின் அறிவாற்றல், அவனது உடல், உள்ளம், மூளை, ஆன்மா ஆகியவற்றின் அளவற்ற ஆற்றலை உணர்ந்து, தெய்வ நிலைக்கு உயரும் வழி முறையான சிவயோக சித்தாந்தமான யோக கலையின் ஒலி ஓளி வடிவமே  தமிழ்தேசியத்தின் குரல்.

தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு. இந்த உயிர் எழுத்துக்கள் உடல்  சக்கரங்களில் இருந்து எழுகின்ற ஒலியும் ஒளி அசைவுகளில் இருந்து   வெளிப்படுகின்ற  சுடரும் இனைந்ததே தமிழ் சுடா். தமிழ்தேசியத்தின் குரல் .

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ்  மொழியின் அசைவில் எழுகின்ற ஒலி ஒளி வடிவமே தமிழ் சுடா் அதுவே தமிழ் தேசியத்தின் குரல் தமிழ் சுடா்.

 உயிர்மெய்யெழுத்துக்களான 216 இன் அசைவில் எழுகின்ற ஒலி ஒளி வடிவமே தமிழ் சுடா் அதுவே தமிழ்தேசியத்தின் குரல்.         ஆயத எழத்துக்களான ஃ, அங், அம் ஆகிய மூன்றுமே எழத்துக்களின் அசைவில் எழுகின்ற ஒலி ஒளி வடிவமே தமிழ் சுடா் அதுவே தமிழ்தேசியத்தின் குரல் .

குண்டலி சக்தியின் அசைவில் ஏற்படுகின்ற ஒலி ஒளி வடிவமே சிவத் தமிழ் சுடா் அதுவே தமிழ்தேசியத்தின் குரல். 

தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழின் வடிவம். அகர முதல்வனாகிய இறைவன் அருளிய தமிழே முருகனின் வடிவம். அகர முதல்வனாகிய இறைவனின் அசைவில் ஏற்படுகின்ற ஒலி ஒளி வடிவங்களே சிவத் தமிழ் சுடா்   அதுவே தமிழ்தேசியத்தின் குரல்.

கிறிஸ்தவா்களும் இஸ்லாமியா்களும் கூறுவது தமிழ்தேசியத்தின் குரல் அல்ல அது அவா்களின் கிறிஸ்தவ இஸ்லாமிய தேசியங்களின் குரல் ஆகும். எந்தவொரு கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் தமிழ்தேசத்தில் தேசத்தியத்தின் குரலாகமாட்டான்.

தமிழ்தேசியத்தின் குரல் சிவசம்பந்தம் உடையது. அதுவே சிவபூமியின் குரல். அதுவே தமிழின் குரல். அதுவே தமிழ்தேசத்தின் குரல்.

ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன்   தமிழில் எங்கும் நீக்கமற நிறைந்து  நிற்கின்றான்.  தமிழ் சிவன் சாா்ந்தது.  தமிழ்  சைவ சமயம் சாா்ந்தது.  ஆகவே தமிழை அருளிய இறைவனை நிராகாித்து தங்களை தமிழால்  அடையாளப் படுத்துவதும்   தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு.


 ஆக்கம் உலக சைவபேரவை, அருளகம், சிவபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.