கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்.
96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே அதன் பிறகே அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும். சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது சக்தியோடு துணை சேர வேண்டும்
சிரசு ஏற பல வழி தியானம் மூலம் பக்தி மூலம் ஞான மூலம் யோக மூலம் தீட்சை மூலம் சிவசக்தி மூலம் இன்னும் எத்தனையோ மூலம் வழி உள்ளது சிரசு ஏற.
ஆனால் சிறந்த மூலம் இல்லற தர்மம். சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே பிறவியே சிக்கலே மனம் பொறுத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை ஆன்ம பொறுத்தமே பிறவியை ஜெயிக்கும்.
.அந்த சக்தி யோடு சிவம் சேரும் போதே சர்வமும் சாந்தி ஆகும் சிவ சக்தி இடையே ஊடலும் கூடலூம் உற்சாகம் தானே
ஆனால் சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை. ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழி தர்மத்தில் உள்ளது உண்மையே.
ஆனால் உறவுகளை கொண்டே உலகை வெல்வதும் பிறவி பிணி அறுக்க வும் ஒரு வழி உள்ளது உலகம் அறியாதது. சொந்தம் என்பது பழைய பாக்கி என அறிந்தவனுக்கு சொந்தம் சுமை இல்லை.
நட்பு என்பது பழைய பகை என்பதை பண்போடு அறிந்தவணுக்கு பதற்றம் இல்லை எதிரி என்பவன் தனது கர்மாவின் தார்மீக கணக்கே என தன்மை யோடு உணர்ந்தவனுக்கு எதிரி இல்லையே... உனது எதிரியும் நீயே!
உனது செயலே கர்மா ஆகி அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும் ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கு எதிராக பயன்படுத்துகிறது என நீ உணரும் போது... உன் எதிரி முகத்தில உனது கர்மா உனது கண்களுக்கு தெரிய வந்தால்... எதிரி உனக்கு எதிரே இருந்தாலும் கலக்கம் தேவை படுவதில்லை.
உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும் உனது பழைய கணக்கிலே! பழைய கணக்கு புரிந்தால் பந்த பாசம் சகோதரத்துவம் மீது பற்று அற்ற பற்று வைத்து பிறவி கடமை வெல்லலாம்.
. கர்மாவின் கணக்கு புரிந்தால் உனது பக்கத்தில் சரி பாதி அமரும் மனைவி யார் என்றும் புரியும். தாய் தந்தையை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி தாய் வழி.
ஆக்கம் அருளகம் சிவபுரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.