11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

கைதடியை மீட்ட உருத்திர சேனை.

 கத்தோலிக்க மதம் மாற்ற புரோக்கர்களின் கையில் முழுதாக விழவிருந்த கிராமத்தை மீட்டெடுத்தது உருத்திர சேனை. மீட்டதுமட்டுமல்லாமல் ஊரில் உள்ள அனைவரிட்கும் உருத்திராட்சம் அணிவிக்கும் வைபவமும் நிகழ்த்தப்பட்டது.

கைதடியை சேர்ந்த குடியேற்ற கிராமம் ஒன்றை முழுதாக மதம் மாற்றுவதை இலக்காக வைத்து இரு கிறீஸ்தவ சபைகள் போட்டி போட்டு செயற்படும் விடயம் உருத்திர சேனையின் காதுக்கு எட்டியதை அடுத்து அக்கிராமத்து மக்களை நேரடியாக சந்தித்த உருத்திர சேனையின் தலைவர் மற்றும் தன்னார்வல சைவ நலன் விரும்பிகள் ஊர் மக்களிற்கு மதமாற்ற புரோக்கர்கள் மற்றும் அவர்களின் ஏமாற்று வேலைகள் பற்றி தெளிவுபடுத்தியதுடன் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் விளக்கமளித்தனர். பின்பு கிராமத்தில் உள்ள குழந்தைகள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவரிட்கும் உருத்திராக்கம் அணிவிக்கும் வைபவமும் நிகழ்ந்தது. 

முகம் முறித்து பழக்கம் இல்லாத சைவ மக்கள் இந்த மதமாற்றிகளை வீட்டிற்குள் கூப்பிட்டு கதைப்பதுதான் விடும் பெரிய பிழை, மதம் மாற்றும் கூழிப்படைகளை ஊர் மனையில் வைத்தே விரட்டியடிக்காவிடில் அவர்கள் ஊரை அடித்து உலையில் வைப்பது தடுக்க முடியாது போகும். இனி என்றாலும் நாம் இந்த மதமாற்ற கூழிப்படைகளிடம் இருந்து எம்மையும் எம் இனத்தையும் எம் நாட்டையும் காப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.