11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 11 செப்டம்பர், 2021

முருகனும் சிவனும் தமிழும் ஒன்றே .


ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனே தமிழ் ஆகும்.  ஆகவே சிவனுடன் தமிழ் கலந்த நிலையே தமிழ்தேசியம்.  தமிழ்தேசியத்தில் இறைவனை  நிராகரித்து தங்களை தமிழால்  அடையாளப் படுத்துவதும்  தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு.

தமிழை அருளிய இறைவனை தமிழா்கள் பல உறவுமுறை கொண்ட பெயா்களை சூட்டி வழிபட்டு வந்து கொண்டு இருக்கின்றனா். தமிழா்கள் மத்தியில் காணப்படுகின்ற உறவு முறைகளும் அதன் பயா்ளும் தமிழ்தேசியத்தின் அடயாளக் கூறுகளாகும்.

தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்  தமிழுக்கு அருளிய  இடபக் கொடி தமிழின் கொடி தமிழா்களின் கொடி  தமிழ்தேசியத்தின் கொடி ஆகும். 

தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்   தெய்வீகம்  நிறைந்த  தமிழுக்கு அருளிய கலை கலாச்சார பண்பாடுகள்  அனைத்தும்  இறைவனுடன் கலந்த தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் ஆகும்.  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை நிராகரிப்பதும் பிற மதங்களின் கலாச்சார பண்பாடுகளாக மாற்றுவதும், பிறமதங்களின் கலாச்சார பண்பாடுகளை திணிப்பதும்  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு ஆகும்.

சிவத்தின்  அருள் வடிவான தெய்வீக தமிழ் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு  தீப்பொறிகளாகக் கிளம்பிய பொழுது   பஞ்சபூதங்களான சிவனின் கணங்களில் ஒன்றான  வாயு பகவான் சரவணப் பொய்கை ஆற்றில் விட்டார். 

அந்த ஆறு நெருப்புகள் ஆறு குழந்தைகளாக  பிறப்பெடுத்தன.  ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது  ஆறுமுகன் தோன்றினான்.   

உமை உமையொருபாகனால் உருவான ஆறுமுகன்  தமிழின் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும், தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும், வல்லினம்,   தமிழின் மெய்  எழுத்துக்கள் சிரமும் கரமும் கொண்டும், தனி நிலை எனப்படும் ஆய்தமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு தெய்வீக தமிழ் ஆறுமுகனாக தோன்றினார். 

க,ச,ட,த,ப,ற என்ற வல்லின எழுத்துக்கள் ஆறும் ஆறுமுகனின் மார்பினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ங,ஞ,ண,ந,ம,ன என்ற மெல்லின எழுத்துகள் ஆறும்  ஆறுமுகனின் மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ய, ர, ல, வ, ழ, ள என்ற இடையின எழுத்துகள் ஆறும் ஆறுமுகனின் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. அதில் 12 உயிர் எழுத்துக்கள் , 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்களும், மற்றும் 1 ஆயுத எழுதும் உள்ளடங்கிய தமிழின் 247 எழுத்துக்களின் அவதாரமே ஆறுமுகன். 

தமிழ் எழுத்தை வைத்து பஞ்சபூதங்களை இயக்க முடியும்.மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் இறைவனை அடைய அதில் ஒரு எழுத்து இருப்பதை அறியலாம். அதை முருக பெருமான் கொடுத்தாா்.

(த)- வல்லினம் (மி)- மெல்லினம் (ழ்)- இடையினம் ஆகிய மூன்றும் இனைந்ததே தமிழ். தம்முள் வாழ்வையும் வாழ்க்கைக்கான வசதிகளைப் பெறுகின்ற படைப்பாற்றலையும் கண்ட இனம் வளர்த்தெடுத்த படைப்பாற்றல் நிறைந்த மொழி தமிழ். 

 மூன்று தமிழையும் நீங்கள் கற்றிருந்தால் உங்களால் பஞ்சபூதத்தை ஆளமுடியும். பிற உயிரை அழிக்கவோ ஆக்கவோ முடியும். உங்கள் உயிரை இறக்காமல் முக்தி பேறு செல்லமுடியும். தமிழ் மொழி அறிந்தால் நீங்கள் சாபம் கொடுத்தால் உடனே அது பலிக்கும். பச்சை மரத்தை எறியவைக்க முடியும். சூரியனை  தடுத்து நிறுத்த முடியும். கிரக கதிர்வீச்சை தடை செய்ய முடியும்.தமிழின் சத்தி சிவன் முருகனின் சத்தி சிவனும் தமிழும்.ஆகவே முருகனும் சிவனும் தமிழும் ஒன்றே . முருகனும் சிவனும் தமிழும் என்றும் பிாிக்க முடியாதவாறு கலந்தே காணப்படுகின்றது.

முருகனின் அனைத்து தமிழ் பெயா்களும், நெற்றியில் இருக்கின்ற திருநீறும் பொட்டும், முருகனின்  கலாச்சார பண்பாட்டு உடைகளும் அனைத்தும் கலந்ததே தமிழ் ஆண்களுக்கான   தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளாகும்.   

தமிழ்தேசியம் பேசிக் கொண்டு தமிழை பேசிக் கொண்டு   தங்களை தமிழால் அடையாளப்படுத்திக் கொண்டும் தமிழை அருளிய இறைவனையும்  தமிழின் பிறப்பான முருகனையும்      நன்றிகூறி வழிபடாமல்  நிராகாித்துக் கொண்டு  தமிழின அழிப்பு.

தமிழ் சிவம் சாா்ந்தது. முருகனின் அவதாரம் சாா்ந்தது. தமிழ் சமயமான சைவம் சாா்ந்து. சிவனிடம் இருந்தோ முருகனிடம் இருந்தோ என்றும் பிாிக்க முடியாதவாறு தெய்வீகமாகவே கலந்து தமிழ்தேசியமாக காணப்படுகின்றது. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை சாா்ந்தவா்கள் தங்களை தமிழா்கள் என்று என்றுமே அடையாளப்படுத்த முடியாது.


அருளகம், சிவபுரம்.





                                       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.