Tuesday, 6 October 2020.
அளவையம்பதி சைவ சமயத்தின் தெய்வீகம் தவழும் புண்ணிய சிவபூமியாகிய இலங்கைத் தீவை கலை, கலாச்சார பண்பாடு அடையாளக் கூறுகளுடன் பாதுகாத்து வந்த பிரதேசமாகும். இப் பண்பாடே தமிழ்த் தேசியத்தின் மூல அடையாளமாகும்.
அளவையம்பதியில் புதிதாக அமைக்கப்பட்ட மகாஜன சபை கட்டிட திறப்பு விழாவில் முன்னாள் அங்கத்தவர்களான கொலை செய்யப்பட்ட இறைகுமாரன், உமைகுமாரன் உட்பட அனைத்து இயக்க உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்ய மறுக்கப்பட்டது. தமிழ் மக்களை அளவையம்பதியில் வைத்து விற்றதற்கு ஒப்பான சம்பவமாகும். சாதியின்பால் குறைந்தவர் என்ற ஓர் காரணத்திற்காக, உள்ளூர் கிறிஸ்தவ மதபோதகரை நிராகரித்து, பணத்திற்காக சைவத் தமிழ் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி தமிழ்ப் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்திய போா்த்துக்கீச வேளாள வம்சாவழி அதி உயர்சாதி கிறிஸ்தவ மதபோதகரை அழைத்து மேலும் மேலும் தமிழ் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தியது தமிழ் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் வழக்கமாக உள்ளது. இந்த மரபை மீறி மெழுகுவர்த்தி கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கலாச்சார பண்பாட்டு அவமதிப்பு செய்யப்பட்டு, தமிழர் பண்பாட்டு வாழ்வியலிலும் சிதைப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழர் கலாச்சார பண்பாடுகளுக்கு அமைய மாலை அணிவிப்பதற்கு என்று ஒரு ஒழுங்கு விதி உண்டு. அந்த ஒழுங்கு விதியை கத்தோலிக்க மதப் போதகர் பின்பற்றாமல் அவமதித்து உள்ளாா்.
போா்காலங்களில் நீங்கள் ஊரை விட்டு ஓடிய போதிலும், ஆலய குருமாா்கள் பல கஸ்டங்களுக்கு மத்தியில் ஆலயங்களை பராமரித்து பாதுகாத்து வந்தார்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அவர்களை அழைத்து கெளரவிக்காமல் ஆசியுரை தந்தால் போதும் என்று வாங்கியது நீங்கள் வரத்தேவை இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியதாகும்.ஓர் கவலையான சம்பவமாகும். அத்துடன் அளவையம்பதியில் உள்ள பல சைவ ஆலய குருமாா்களை அவமதித்த செயலாகும்.
அளவையம்பதியில் புதிதாக அமைக்கப்பட்ட மகாஜன சபை கட்டிடம், இலங்கை பூராகவும் கிறிஸ்தவ மிசனறிகளும் அவர்களின் ஆக்கிரமிப்புப் படைகளும் இலங்கை மீது படையெடுத்து அழிக்கப்பட்ட எண்ணில் அடங்காத பல சைவக் கிராமங்களை மீட்டு எடுப்பதற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அளவையம்பதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அளவையம்பதி மக்கள் வேண்டி நிற்பது, சாதி மதங்களைக் கடந்து தங்களின் வாழ்வு நெறியான சைவத் தமிழ்த் தேசியத்தை மீட்டு பாதுகாப்பதற்கு மகாஜன சபை கட்டிடத்தைப் பயன்படுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்பதே ஆகும். அளவெட்டி மகாஜன சபை கட்டிட திறப்பு விழா ஒரு தமிழ் கலாச்சார பண்பாட்டு கொலைக்களமாகவும் சாதியத்தை வளா்த்த திறப்பு விழாவாகவும் காட்சி கொடுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.