ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஆகவே பிறமொழி கலப்படம் அற்ற தமிழ் பெயரை அடையாளமாக கொண்டு இருப்பவன் தமிழன். தமிழா்கள் தங்களின் அடையாளமாக தலையில் தலைப்பாகையும் நெற்றியில் திருநீறும் பொட்டும் அணிந்து கொள்வா், தமிழனின் மரபணு விலுள்ள வீரம் புதைத்தாலும் என்று அழியாது. இவை அனைத்தையும் தாங்கி கொள்பவனே தமிழன். அதுவே தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளாகும். தமிழனின் தோற்றம் மங்களகரமானது.
தமிழை அருளிய இறைவனை பல உறவுமுறை பெயா் கொண்டு அழைத்து வழிபட்டு உறவு கொண்டாடியவா்கள் தமிழா். தமிழா் சிவனுடன் சம்பந்தமாணவா்கள். இறைவனை ஏற்றுக்கொண்டவா்கள் மட்டுமே தமிழா்.
ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ்.
தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழில் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்றான். தமிழ் சிவன் சாா்ந்தது. தமிழ் சைவ சமயம் சாா்ந்தது. ஆகவே சிவனுடன் தமிழ் கலந்ததே தமிழ்தேசியம். தமிழை அருளிய இறைவனை நிராகாித்து தங்களை தமிழால் அடையாளப் படுத்துவதும் தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு. தமிழ்தேசியத்தில் இறைவனை தவிர எதுவும் நிலையானது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.