11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 8 செப்டம்பர், 2021

இன அழிப்பு கோட்பாடு (Genocide ).

 மொழியால் அடையாளப்படுத்தபடும் இனத்தின் மத கலாச்சார பண்பாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் அந்த மொழியின் மதத்தாலும் கலாச்சார பண்பாடுகளினாலும் அடையாளப் படுத்தப்பட்டவர்கள். அவர்களை பிறிதொரு மதத்தின் கலாச்சார பண்பாடுகளுக்கு மாற்றுவது இன அழிப்பு.

இனமொன்றின் இருப்பினையும் இருப்பின்மையினையும் நிலைநிறுத்துகின்ற இனம் சார் அடையாளத்தை இனத்தின் குறிகாட்டியாக்கி இனத்தின் இருத்தலை நீட்டிக்கின்ற பெரும் காரணி மொழியும் மொழியினதுடைய கலாச்சார பண்பாடுகள் ஆகும்.  கலாச்சார, பண்பாடுகளையும், மொழியின் தேசிய விழாக்களையும் சிதைத்து சிதைத்து அழித்து விடுவதால்  அந்த இனம் தானகவே அழிந்துவிடும். என்பதை விளக்குவதே இன அழிப்பு கோட்பாடுகள் ஆகும். 

மொழி என்பது தேசியத்தின் அடையாளம், கலாச்சார பண்பாட்டின் அடையாளம், தேசத்தின்  அடையாளம். தேசமும் தேசியமும் மக்களுடைய வாழ்வியலும் சார்ந்த இவற்றினை அழிப்பதன் ஊடாக ஒரு இனத்தை அழிக்க முடியும் என்பதை விளக்குவதே இன அழிப்பு கோட்பாடுகள் ஆகும். 

மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது. 

பொதுவாக இனப்படுகொலை என்பது முறைப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான முறையில் இனவரையறை, நிற பேதமை, மதம் மற்றும் தேசியம் என்ற ஏதாவதொரு வகையில் ஒரு இனத்தை பாகுபடுத்தி, அந்த இனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பது இன அழிப்பு ஆகும்.

ஒரு தேசிய இனத்தின் உறுப்பினர்களை கொல்வது உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான தீங்கினை ஏற்படுத்துவது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.

ஒரு தேசிய இனத்தின்  புதிதாக பிறப்புக்களை தடுக்கும் நோக்கில் செயற்படுவது, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு இனக்குழுவுடன் சேர்ப்பது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது. 

 ஒருதேசிய இனத்தின் அடையாளங்களில் ஒன்றான  பெயரை பிறிதொருதேசியத்தின் அடையாளமான பெயராக மாற்றி அமைப்பதும், ஒரு தேசிய இனத்தின் பெயருடன் இன்னுமொரு தேசிய இனத்தின் பெயரை கலந்து அடையளப்படுத்துவதும், ஒரு தேசிய இனம் பிறிதொரு தேசிய இனத்தின் பெயரை சூட்டுவதும்  இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.

ஒரு தேசியத்தின் மொழிசாா்ந்த மதம்சாா்ந்த கலாச்சார பண்பாடுகளில் இருந்து இன்னுமொரு தேசியத்தின்   மொழிசாா்ந்த மதம்சாா்ந்த கலாச்சார பண்பாடுகளுகளுக்கு மாற்றுவதும் இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.

ஒரு தேசியத்தின் அடையாளமான மதத்தில் இருந்து இன்னுமொரு தேசியத்தின் மதத்திற்கு மதமாற்ற செய்வது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.

ஒரு நாட்டில்  அந்த நாட்டின் தேசியத்தின் அடையாளக் கூறுகளை அழிப்பதும் அழிக்கப்பட்ட தேசியத்தின் அடையாளத்தின் மீது இன்னுமொரு தேசியத்தின் அடையாளக் கூறுகளை நிறுவதும், ஒரு நாட்டில்  அந்த நாட்டின் தேசியத்தின் அடையாளக் கூறுகளை நிறுவதும்  இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.

ஒரு நாட்டின் தேசியத்தின் மதத்தை அழித்து பிறிதொரு  நாட்டின் தேசியத்தின் மதத்தை நிறுவுவது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.

 ஆக்கம் அருளகம், சிவபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.