11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 9 செப்டம்பர், 2021

தமிழர்களின் நாட்டின் தன்னிறைவு பொருளாதாரத்தை கட்டி எழுப்பிய தமிழர்களின் ஆலயங்கள்

 கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை * கட்டி எழுப்பி உலகிற்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டியவன் தமிழன்.  தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கோவில்கள் பெரும்கோபுரங்கள் உலகில் என்றும் இல்லாத சிற்பக் கலை அழகுடன் மாடமாளிகைகள் போன்று பெருநிலப்பரப்பில் இருந்து.அரசாங்கங்களாக செயல்பட்டன.  

ஆலயங்களுடன் வாழ்ந்த தமி்ழ் சமூகமே பல வேலைவாய்புகளையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழ்தாா்கள். ஆலயம் உயிா்களின் காப்பரனாக இருந்த காரணத்தால்  "கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று எமது முன்னோா்கள் கூறிச் சென்றாா்கள்".

தமிழழ்தேசத்தின் நாடி நரம்புகளான  ஆலயங்கள் ஆலயகோபுரங்கள் ஆண்மீகத்தையும், பண்டகசாலைகளாகவும்,  வேலை வாய்புகளையும் சமூகசேவைகளையும் வழங்கும் அமைப்பாகவும் மக்களுக்கு வழங்கும் நிலையங்களாகவே தொழில்பட்டன.

அந்தனர் சமூகம்.    

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும், உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம். அவர்களுக்கான வருமாணங்களை கொடுத்தும் அவர்களை வளர்த்ததும் ஆலயங்களாகும்.

பண்டகசாலை. 

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12  வருடங்கள் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்களை சேகரித்து வைத்தனர்.  12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து பணிகள் மேற்கொள்ள சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு. பலவகையான தாணியங்கள் சேகரித்து வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.இதன் காரணமாக இங்கு வேலை செய்தோர் தங்களின் வருமாணங்களையும் பெற்றுக் கொண்டனர்.

சிற்ப கலைஞர்களுக்கான வேலை வாய்புகள்.  

உலகில் என்றும் இல்லாத சிற்பக் கலை அழகுடன் இருந்தன. இதன் மூலம் பல சிற்பகலைஞா்கள் வேலைவாய்புகள் பெற்றனர். அவர்கள் தங்கள் கலை ஆற்றல்களை வளர்த்தனர்.அத்துடன் தங்களின் வருமாணங்களையும் பெற்றுக் கொண்டனர்.

விவசாயம்.      

 ஆலயசுற்றாடலில் பாாிய நீா்தேக்க குளங்கள்  அமைக்கப்பட்டு  நிலத்தடி நீர் மட்டங்கள் பாதுகாக்கப்பட்டு செழுமையான தமிழர் நிலமாக பாதுகாக்கப்பபட்டதுடன் இங்கு பல பேருக்கு தொழில் வாய்புகளும் வழங்கப்பட்டன.ஆலயத்தின் விவசாய நிலங்கள்  விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம் இதன் மூலம் பாண்ட மாற்று முறையில் தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்,

சித்த ஆயுள்வேத மருத்துவமனை.    

ஆலயங்களுடன் இனைந்தே  சித்த ஆயுள்வேத மருத்துவமனை,சித்த ஆயுள்வேத களஞ்சியம், சித்த ஆயுள்வேத பயிற்செய்கைகள் என்பன இடம் பெற்றன. இதன் காரணமாக ஆலயங்களுடன் வசித்த மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தாா்கள்.

கல்விச்சாலை சாலைககள்.       

 ஆலயத்தில் இயங்கிய அறநெறி பாடசாலைகள் அறநெறிகளையும், ஞானநெறிகளையும், ஆயற்ககலைகள் அறுமத்தி நான்கினையும், வானியல் சாாஸ்திரங்கள், போா்கலைகள் என பல்வேறு கலைகளை போதித்து தமிழர்களை வளம்படுத்திய ஆலயங்கள் இங்கு பயின்ற மாணவர்களுக்கு இலவச உணவுககளையும் வழங்கி ஆரோக்கியத்துடன் வளர்த்தாா்கள்.

ஆலயத்தின் சமைக்க சமையல் கலைஞர்கள்.  

ஆலயத்திற்கு நெய்வேத்தியம் சமைக்க சமையல் செய்வதற்கும் அங்குவேலைகள் செய்பவர்களுக்கும், அறநெறி பாடசாலையில் படிக்கின்ற மாணவர்கள் என பல்வேறு பட்டவர்களுக்கு உணவுகள் சமைப்பதற்கு  சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் காரணமாக பல மக்கள் வேலை வாய்புகளை பெற்றனர்.

ஆலயத்தின் கோமாத காப்பகம்.      

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள் கிடைக்கப் பெற்றன.இதன் மூலம் ஆலயம் சாா்ந்த கிராமங்கள் தன்னிறைவு பெற்றன.

ஆலயத்தின் சகல விதமான பாத்திரங்கள் செய்வதற்கு  கலைஞர்கள்   நியமிக்கப்பட்டனர்.     

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்வோர், மண்பானை செய்வோர், மற்றும் உலோக பாத்திரம்  மற்றும் ஆலயத்திற்கு தேவையான உலோக பொருட்கள் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலைகளும் வருமாணங்களளும் கிடைக்கப்பெற்றன.

ஆலயத்தின் நந்தவனம்.     

 நந்தவனம்மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள் நடைபெற்றன பெரும் தொகையான வருமாணங்களை பெற்றனர்.

ஆலயத்தின் கலைஞர்கள்.     

 மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள்,  ஏனைய கலைஞர்கள் நியமிக்கப்பட்டனர்.  அவர்களுக்கும்  வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதன் மூலம் பெருமளவு மக்கள் வருமாணம் பெற்றனர்.

ஆலயம் வழங்கிய ஏனைய வேலைவாய்புகள்.  

 இறைைவனின் அலங்கார உடுப்புகள் நெய்வதற்கும் மக்களுக்கான உடுபுடவைகள்  நெய்வதற்கும்  கலைஞர்கள்  நியமிக்கப்பட்டனர்.  இவ்வாறு நெய்யப்பட்ட ஆடைகளை  துவைக்கவும்  அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலைவாய்புகள் வழங்கப்பட்டன இதன் மூலம் பெருமளவு மக்கள் வருமாணம் பெற்றாா்கள். கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ளவதற்கு பெருமளவு வேலை வாய்புகள் ஆலயங்களினால் வழங்கப்பட்டன.இதன் மூலம் மக்கள் வருமாணத்தை பெருக்கி கொண்டாா்கள்.

* பூ உற்பத்தி செய்பவர் * மாலையாக கட்டுபவர்   * அதனை விற்பனை செய்பவர்  * அர்ச்சகர்  * அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்  * கோயில் காவலாளிகள்,  * தேங்காய் உற்பத்திசெய்பவர்,   * தேங்காய் விற்பனைசெய்பவர்.  *  ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்  * அதனை விற்பனை செய்பவர்கள்  (மொத்தமாகவும் சில்றையாகவும்,)  * கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,           *அதனையும்   மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்.

 * சந்தனம்,குங்குமம், பழவகைகள்,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்  * பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் , விற்பனைசெய்பவர்கள்,  * வாழைமரம் வளர்ப்பவர்கள்  * அவற்றை விற்பனை செய்பவர்கள்,  * கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,  * இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 * வாசலில்அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள்  * கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்  * அதன் ஓட்டுனர்கள்  * கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்  * மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்)  * தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.  * கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம்   முகாமையாளர் வரை  * உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள்  * ஓதுவார்கள்,  * நாதஸ்வர,தவில் கலைஞர்கள்  * ஒலி, ஒளி அமைப்பாளர்கள்  * சிற்ப கலைஞர்கள்  * ஓவியர்கள்  * கட்டட கலைஞர்கள்  * ஆசாரிமார்கள்.    

 *விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,  *விசேட காலங்களில்அறுசுவை உணவுகளை தயாாித்து அடியாா்களுக்கும் ஆலயங்களில் வேலை செய்பவர்களுக்கும் உணவளிப்பவர்கள் , இறைைவனின் அலங்கார உடுப்புகள் நெய்வதற்கு  கலைஞர்கள் உருவாக்கப்பட்டனர். 

* இறைைவனின் ஆடைகளை  துவைக்க தொழில்கள் உருவாக்கப்பட்டன. *கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ளவதற்கு பெருமளவு வேலை வாய்புகள் ஆலயங்களினால் வழங்கப்பட்டன. 

இவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்கும் வரவு செலவுகள் கணக்குகள் பேணிபராமரிப்பதற்கும் என்று பெருமளவு மக்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன.* மேலும் பல தொழில்கள் அடங்குகின்றன.

ஆலய நிா்வாக சபையும் கணக்காளர்கள் சபையும் உருவாக்கப்பட்டன.    

   இவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்கும் வரவு செலவுகள் கணக்குகள் பேணிபராமரிப்பதற்கும் என்று பெருமளவு மக்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் பெருமளவு வருமாணங்களை பெற்றனர்.   

தன்னிறைவு பொருளாதார கண்ட ஆலயம். மாத சம்பளம்       பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கையை கொடுத்தது ஆலயங்கள் சகல ஆலயங்களின் வரசெலவு கணக்குகள் இறுதியாக அரச சபைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாட்டின் வரவு செலவுகள் பராமரிக்கப்பட்டே வந்தன..

தமிழர்கள் தொழில் அடிபடையிலோ அல்லது சமூகத்தின் கட்டமைப்பின் அடிபடையிலோ சாதியம் வகுக்கப்படவில்லை. தொல்காப்பியரின் இலக்கியத்திலும் சாதியம் இல்லை. சமத்துவவாத அடிப்படையில்தான் ஆலயங்கள் தமிழர் சமுதாயத்தை வழிநடாத்தியது.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தமிழர்தேசத்தை கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோணியில் கொள்ளையர்களான  போா்த்துக்கீச கத்தோலிக்கம் கரையேறுவதற்கு முன்பு உலகத்திலேயே மிகவும்  செல்வச்செழிப்போடு இருந்த தமிழ் மண் எங்கள் தமிழ்தேசியத்தின் மண்.இதனை கட்டி எழுப்பியது சைவ ஆலயங்களாகும்.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த வருமாணத்தால் செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். என்பதனை  அறிந்து கொண்ட போா்த்துக்கீசர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள்   மதபோதகர்கள் என்ற வேடம் போட்டு மாறி மாறி கள்ளத்தோணியில் கரயேறி பலசதிகள் பலசூழ்ச்சிகள் செய்து தமிழர்களின் ஆட்சிகளை வீழ்த்தி, பல இலட்சம் தமிழர்களை  கொலை செய்து பல ஆயிரம் ஆலயங்களை உடைத்தெறிந்து பலகோடி பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையிட்டும் பலகோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தும் அடிமைபடுத்தியும், செல்வ செழிப்புகளோடு வாழ்ந்த தமிழ் இனத்தை பிச்சை எடுக்க வைத்தவர்கள் தமிழர்களை தொடர்ச்சியாக அடிமைபடுத்தி அழிப்பதற்காக தொழில்களை சாதியமாக மாற்றினாா்கள்.

ஆகவே தமிழையும் சைவத்தையும் தந்தவர்களை விட உலகில் எந்தவொரு முற்போக்கு சந்ததிகள் இருக்க மாட்டாா்கள். ஆகவே தமிழர்களே உங்களின் முன்னோா்களின் பெருமைகளளை உங்கள் சந்ததியினருக்கு எடுத்துக் கூறுவது உங்களின் கடமை.பல்வேறு வரலாற்று ஆய்வுகளில் இருந்துபெறப்பட்ட தகவல்களை கொண்டு உங்களுக்காக எழுதப்பட்டது. அன்பேசிவம். அருள். அருளகம் சிவபுரம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.